மத்திய அரசின் 'புனித யாத்திரை திட்டம்'.. தேர்வுப் பட்டியலில் 8 தமிழக கோவில்கள்..!! - Seithipunal
Seithipunal



மத்திய அரசின் புனித யாத்திரை திட்டத்தில் ஆலங்குடி குருபகவான் கோவில், தஞ்சாவூர் கஞ்சனூர் அக்னீஸ்வரர் கோவில் உட்பட 8 தமிழக கோவில்கள் இடம் பெற்றுள்ளன. இது குறித்து மத்திய அரசின் சுற்றுலாத் துறை ஒரு குறிப்பு வெளியிட்டுள்ளது. 

அதன்படி 2024 - 2025ம் ஆண்டிற்கான மத்திய அரசின் சுற்றுலாத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் அறிவிக்கப் பட்டுள்ள விபரங்கள் கீழ் வருமாறு அறியப் படுகிறது. மத்திய அரசின் சுற்றுலாத் துறையானது இந்திய கோவில்களில் சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்த முயற்சித்து வருகிறது.

அந்த வகையில் நாடு முழுவதும் உள்ள சில தேர்ந்தெடுக்கப் பட்ட யாத்திரை தலங்களில் சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில், 'புனித யாத்திரை, புத்துயிர் மற்றும் ஆன்மீகம், பாரம்பரியத்தை மேம்படுத்துதல் (PRASHAD) என்று ஒரு புத்தம் புதிய திட்டத்தை அறிமுகப் படுத்தி உள்ளது. 

இந்த திட்டத்தில் தமிழகத்தில் உள்ள 8 கோவில்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளன. அவை திருவாரூர் ஆலங்குடி குருபகவான் கோவில், திங்களூர் கைலாசநாதர் கோவில், திருநாகேஸ்வரம் நாகநாதர் கோவில், தஞ்சாவூரில் உள்ள கஞ்சனூர் அக்னீஸ்வரர் கோவில், திருவிடைமருதூர் சூரியனார் கோவில், திருவெண்காடு ஸ்வேதாரண்யேஸ்வரர் கோவில், வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள வைத்தியநாத சுவாமி கோவில் மற்றும் மயிலாடுதுறை கீழப்பெரும்பள்ளத்தில் உள்ள நாகநாத சுவாமி கோவில் ஆகிய 8 இடங்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளன. 

மேலும் இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப் பட்டு மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகத்திற்கு அனுப்பப் பட்டுள்ளது" என்று குறிப்பிடப் பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central Govts Pilgrimage Scheme 8 TN Temples Selected


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->