வேலையை காட்டும் நிதிஷ்,சந்திரபாபு! அதிக நிதி பெற இருவரும் போட்டா போட்டி! - Seithipunal
Seithipunal


ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை சந்திக்க இருந்த நிலையில் சந்திப்பு திடீரென ரத்து செய்யப்பட்டதால் சந்திரபாபு நாயுடு மீண்டும் ஆந்திரா திரும்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் மற்றும் ஆந்திரா முதலமைச்சரின் முதல் அமைச்சர் சந்திரபாபு நாயுடு இருவரும் தங்களுடைய மாநிலங்களுக்கு அதிக நிதி பெறுவதில் ஆரம்பிக்காட்டி வருகின்றனர். அதனால் அடிக்கடி டெல்லி பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

15 நாட்களுக்கு முன்பு இரண்டு நாட்கள் சந்திரபாபு நாயுடு டெல்லியில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய மந்திரிகளை சந்தித்து பேசினார். ஆந்திர மாநிலத்திற்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை மற்றும் 7 அம்சவளர்ச்சி குறித்த பட்டியில் பிரதமர் மோடியிடம் சந்திரபாபு நாயுடு வழங்கியதாக கூறப்படுகிறது.

விரைவில் மத்திய பட்ஜெட் கூட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் உத்தரவின் பேரில் சஞ்சய் குமார் கடந்த திங்கட்கிழமை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து நிதி குறித்து பேசியதாக தகவல் வெளியானது.

அதனை தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு டெல்லி சென்று அங்கு மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசினார். பின்னர் ஆந்திரா பட்ஜெட் தொடர்பாக கணிசமான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

மத்திய பட்ஜெட் அறிவிப்பு வெளியாகும் முன்னே சந்திரபாபு நாயுடுயும்  நிதிஷ்குமாரும் போட்டி போட்டுகொண்டு டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்தித்து அழுத்தம் குடுத்துவருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chandrababu Naidu was scheduled to meet Union Finance Minister Nirmala Sitharaman but the meeting was suddenly cancelled


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->