சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு: எதற்காக தெரியுமா? - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் வருகின்ற 26 ஆம் தேதி குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த கொண்டாட்டத்தை சீர்குலைக்க சதி திட்டம் தீட்டி உள்ளதாக மத்திய உளவுத்துறை ரகசிய தகவல் கிடைத்தது.  

இதனால் மத்திய உள்துறை அமைச்சகம், நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள், வழித்தடங்கள், மக்கள் அதிகம் கூடும் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் போன்ற இடங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

மேலும் விமான நிலையத்திற்கு வரும் வாகனங்கள், பன்னாட்டு மற்றும் உள்நாட்டு புறப்பாடு வளாகங்கள் அருகே நிறுத்துவதற்கு தடை போடப்பட்டுள்ளது. 

கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்கள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது.

வருகின்ற 30ஆம் தேதி வரை முக்கிய பிரமுகர்களுக்கான பாஸ் வாங்க தடை செய்யப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையம் முழுவதும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் வரும் 30 ஆம் தேதி நள்ளிரவு வரை இந்த பாதுகாப்பு அமலில் இருக்கும். 

தற்போது 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில் குடியரசு தின விழா நெருங்கும் பொழுது பாதுகாப்பு அதிகரிக்கும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai airport 5 layer security


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->