அப்டேட் திருட்டு புல்லிங்கோஸ் இவர்கள்தான்... வங்கி பரிவர்த்தனை வழிப்பறி.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள நெற்குன்றம் பகுதியை சார்ந்தவர் ராஜா (வயது 40). இவர் கடந்த 26 ஆம் தேதி தனது இருசக்கர வாகனத்தில் தரமணி இரயில் நிலையம் எதிரே உள்ள சர்வீஸ் சாலையில் சென்று கொண்டு இருந்துள்ளார். 

இதன்போது, அவ்வழியாக வந்த 8 பேர் கொண்ட கும்பலானது, கத்தியை காண்பித்து மிரட்டி ரூ.3 ஆயிரம் பணம் மற்றும் கைக்கடிகாரத்தை பறித்து சென்றுள்ளனர். மேலும், கூகுள் பெ செயலி மூலமாக வாங்கிக்கணக்கின் பாஸ்வேர்டை வாங்கி ரூ.2 ஆயிரத்தை பரிமாற்றம் செய்துள்ளனர். 

இந்த விஷயம் தொடர்பாக ராஜா காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து வங்கிக்கணக்கு பரிமாற்றம் செய்யப்பட்ட எண்ணை வைத்து விசாரணை செய்துள்ளனர். 

இந்த விசாரணையில், தரமணி பகுதியை சார்ந்த பாலமுருகன் (வயது 20), விக்னேஷ் (வயது 21), பிரகாஷ் (வயது 21), சந்தோஷ் (வயது 19), கார்த்திக் (வயது 25), தினேஷ் (வயது 23), அருணாசலம் (வயது 19), ஏழுமலை (வயது 20) ஆகிய 8 பேரை கைது செய்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Google Pay Robbery Pullingos 8 members Arrest by Tharamani Police


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->