என்னை ஆங்கிலத்தில் திட்டுவார்! மருத்துவர் பாலாஜி குறித்து விக்னேஷ் தாய் பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில், தாயாருக்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என்று விக்னேஷ் என்ற இளைஞர் பணியில் இருந்த மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்தியுள்ளார்.

இதில் மருத்துவர் பாலாஜி சிகிச்சை பெற்றுவரும் நிலையில், தாக்குதல் நடத்திய விக்னேஷ் கைது செய்யப்பட்டு அவரின் மேல் 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், விக்னேஷின்தாயார் அளித்துள்ள பேட்டி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், "எனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மருத்துவர் பாலாஜியை அணுகினேன். கடந்த மாதம் சிகிச்சை பெற்றபோது, மரியாதை குறைவாக நடந்துகொண்டார். 

காலை 10 மணிக்கு சென்ற என்னை மாலை வரை சிகிச்சை வழங்கவில்லை. தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை உதவாது என்று கூறியதால் என் மகன் விக்னேஷ் மன உளைச்சலில் இருந்தான்.

25 ஆண்டு அனுபவம் கொண்ட மருத்துவர் பாலாஜி எனது உடலில் பிரச்சினையை கண்டறியவில்லை. உரிய ஸ்கேன் இருந்தும் கண்டுபிடிக்கவில்லை. 

மருத்துவர் பாலாஜி என்னை ஆங்கிலத்தில் திட்டுவார், எனவே அவரது செயல்பாடுகளில் கோபமாக இருந்தேன், எனது மகன் செய்தது சரி என்று நான் கூறவில்லை" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Govt Doctor attack case culprit mother press meet


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->