சபரிமலை செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!....இதோ உங்களுக்காக புதிய செயலி! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் சபரிமலை ஐயப்பன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு கேரளா மட்டுமின்றி, தமிழகம், கர்நாடகம், தெலுங்கானா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருகை புரிகின்றனர்.

குறிப்பாக மார்கழி மாதத்தில் இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல பூஜை விழாவிற்காக, கோவில் நடை கார்த்திகை மாதம் முழுவதும் திறக்கப்பட்டிருக்கும். இந்த காலகட்டங்களில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள் இதனால் அங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

பின்னர் மண்டல பூஜை முடிந்த உடன், கோவில் நடை அடைக்கப்பட்டு தை மாதமான மகரஜோதியின் போது கோவில் நடை மீண்டும் திறக்கப்படும். இந்த காலகட்டங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
அதன்படி, நடப்பு ஆண்டில் வரும் டிசம்பர் மாதம் 26-ம் தேதி மண்டல பூஜை நடைபெறும் நிலையில், அன்று இரவு நடை சாத்தப்பட்டு, மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் மாதம் 30-ம் தேதி நடை திறக்கப்பட உள்ளது.

இந்த நிலையில், ஏஐ மூலம் பக்தா்களுக்குத் துல்லிய தகவல்களை வழங்கும் விதமாக  உருவாக்கப்பட்டுள்ள ஏஐ சாட் பாட் செயலியின் இலச்சினையை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்டார். இதன் மூலம், பூஜை நேரங்கள், ரயில் மற்றும் விமான நிலைய வசதிகள் குறித்த தகவல்களை மலையாளம், தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் சாட்பாட் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Attention devotees going to sabarimala here is a new app for you


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->