மத துஷ்பிரயோக பேச்சு! விடுதலை சிவப்பிக்கு நிபந்தனை முன்ஜாமீன் - உயர்நீதிமன்றம் உத்தரவு!
Chennai HC order for Viduthalai Sivappi case
சென்னையில் இயக்குனர் பா.ரஞ்சித்தின் வானம் கலைத்திருவிழா என்ற நிகழ்ச்சியில், கடவுள் ராமர், சீதை மற்றும் ஹனுமன் குறித்து தரக்குறைவாக விடுதலை சிகப்பி பேசியது சர்ச்சையை உண்டாக்கியது.
மலக்குழி விவகாரத்தில் ஆளும் ஆட்சியர்களை விமர்சிக்க முடியாத விரக்தியில், மத கலவரத்தை தூண்டும் வகையிலும் கடவுள்களை இழிபடுத்தி இப்படியான சம்பவம் நடைபெற்றுள்ளதாக சமூக வலைத்தளங்களிலும் கண்டன குரல் எழுந்தது.
இதுகுறித்த ஆதாரத்துடன் விடுதலை சிவப்பி மீது தமிழக காவல்துறை தலைவர் (டி ஜி பி) மற்றும் சென்னை நகர காவல் துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது.
பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநராக பணியாற்றும் விடுதலை சிகப்பி மீது 5 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
ராமர்,சீதை மற்றும் ஆஞ்சநேயர் குறித்து தரக்குறைவாக பேசிய விடுதலை சிகப்பி மீது U/s 153, 153 A (1) (a), 295 (A), 505 (1) (b), 505 (2) IPC ஆகிய ௫ பிரிவுகளின் அபிராமபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில், இந்துக் கடவுள்களை இழிவாக பேசிய வழக்கில் பா ரஞ்சித் உதவிய இயக்குனர் விடுதலை சிவப்பிக்கு முன்ஜாமின் வழங்கி, உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், விசாரணைக்கு தேவைப்படும்போது காவல்துறை முன்பு ஆஜராக நிபந்தனை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
English Summary
Chennai HC order for Viduthalai Sivappi case