ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அரசு மரியாதையா? உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சொன்ன செய்தி!
Chennai High Court BSP Armstrong death case TNGovt info
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அவரின் உடலை திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அருகே பொத்தூரில் அடக்கம் செய்து கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
மேலும் பெரம்பூர் பகுஜன் சமாஜ் கட்சியின் அலுவலக இடத்தில் நினைவிடம் அமைத்துக் கொள்ளலாம் என்றும், அரசின் அனுமதியை பெற்றுக் கொள்ளலாம் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கட்சி அலுவலகத்தில் நினைவு மண்டபம் அமைக்க எந்த பிரச்சனையும் இல்லை, இருப்பினும் தமிழக அரசின் அனுமதியுடன் இந்த நினைவு மண்டபத்தை கட்டிக் கொள்ளலாம் என்றும். கண்ணியமான முறையில் ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும் போதுமான போலீஸ் பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், ஆம்ஸ்ட்ராங் நினைவாக நினைவிடம், மருத்துவமனை அமைக்க விரும்பினால் தமிழக அரசிடம் அனுமதி பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
இதற்க்கு, ஆம்ஸ்ட்ராங்கின் உடலை அமைதியான முறையில் அடக்கம் செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பு தெரிவிக்கப்பட்டது.
ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அரசு மரியாதை தரக்கூடிய விண்ணப்பம் மீது தமிழக அரசு முடிவு எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த விவகாரத்தில் தமிழக அரசு பெருந்தன்மையுடன் செயல்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழங்கறிஞர், அரசு மரியாதை கேட்டு மனு அளிக்கப்பட்டு, அந்த மனு நிராகரிக்கப்பட்டால் அரசுக்கு தவறான பெயர் வரும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Chennai High Court BSP Armstrong death case TNGovt info