தென் ஆப்ரிக்காவில் இருந்து சிதம்பரம் வந்த 3 பேருக்கு கொரோனா.! ஒமிக்ரான் பரிசோதனை அனுப்பிவைத்து.! - Seithipunal
Seithipunal


உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பாதிப்பில், இந்தியாவைப் பொறுத்தவரை ஒட்டுமொத்தமாக 450 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதில், அதிகபட்சமாக மகாராஷ்டிரா, தலைநகர் டெல்லியில் ஒமைக்ரான் வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதற்கிடையே, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை ஒமைக்ரான் குறித்து மத்திய அரசு எச்சரித்துள்ளது. அறிவியல் ஆதாரத்தின்படி டெல்டா வகையைக் காட்டிலும் ஒமைக்ரான் வகை மூன்று மடங்கு அதிகம் பரவக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, இந்தியாவில் மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம், அசாம், கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் இரவு 11 முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக, அம்மாநில முதல்வர்கள் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.

தமிழகத்தை பொறுத்தவரை இரவுநேர ஊரடணக்குக்கு வாய்ப்புகள் இல்லை என்று ஏற்கனவே தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது பாதிப்பு 40 நெருங்கி கொடு உள்ளது.

இந்நிலையில், தென் ஆப்ரிக்காவில் இருந்து சிதம்பரம் (கடலூர் மாவட்டம்) வந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பதித்த அந்த 3 பேருக்கும் ஒமிக்ரான் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chidambaram 3 MEMBER OMICRON TEST


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->