பிரதமர் மோடியை சந்திக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்! - Seithipunal
Seithipunal


கடந்த மாதம் 27-ந்தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்று இருந்தார். 

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோ நகர்களில் சுற்றுப்பயணம் செய்து 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டார். அமெரிக்க பயணத்தை 17 நாட்கள் முடித்துவிட்டு கடந்த 14-ந்தேதி அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார்.

அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் மத்தியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, "மெட்ரோ ரெயில் நிதி, பள்ளிக்கல்வித்துறை நிதி விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளேன்" என்று தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை நேரில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரம் கேட்டுள்ளதாகவும், பிரதமர் நரேந்திர மோடி தரப்பில் இருந்து இதுவரை நேரம் வழங்கப்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், நாளை மறுநாள் நேரம் உறுதி செய்யப்படும் பட்சத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி அவர்களை நேரில் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, மெட்ரோ ரெயில் திட்ட நிதி, சமக்ர சிக்ஷா அபியான் திட்ட நிதி,  உள்ளிட்ட கோரிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்துவார் என கூறப்படுகிறது .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chief Minister MK Stalin will meet Prime Minister Modi


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->