நேற்றிரவு சென்னையை அதிரவைத்த சம்பவம்! பெரும் வேதனையில் முதல்வர் ஸ்டாலின்! ரூ.10 லட்சம் நிதியுதவி! - Seithipunal
Seithipunal


சென்னை அமைந்தகரையில் நேற்றிரவு பயணி உடனான மோதலில் கீழே விழுந்து மரணமடைந்த மாநகரப் பேருந்து நடத்துநரின் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும், பொது நிவாரண நிதியில் இருந்து நடத்துநரின் குடும்பத்துக்கு ₹10 லட்சம் வழங்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "சென்னை வியாசர்பாடி பணிமனை பேருந்து எண். VYJ 1399, மகாகவி பாரதியார் நகரிலிருந்து கோயம்பேடு பேருந்து நிலையம் நோக்கி சென்றுகொண்டிருந்த மாநகரப் பேருந்தில் நடத்துநராகப் பணியாற்றிவந்த ஜெ.ஜெகன் குமார் (பணி எண்.C52200) பயணி ஒருவருடன் ஏற்பட்ட வாய்தகராறின் போது அப்பயணி தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 24.10.2024 இரவு உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியறிந்து மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

உயிரிழந்த அரசு மாநகரப் பேருந்து நடத்துநர் திரு.ஜெ.ஜெகன் குமார் அவர்களின் குடும்பத்தினருக்கும் அவருடன் பணியாற்றும் பணியாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்த நடத்துநர் திரு.C.ஜெகன்குமார் அவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் பத்து இலட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று முடஹ்லாமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM MK Stalin Condolence to Chennai MTC Bus Driver death


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->