"டானா" புயலால் எந்த உயிரிழப்பும் இல்லை!...சீரமைப்புப் பணிகள் முழு வீச்சு - ஒடிசா முதலமைச்சர்! - Seithipunal
Seithipunal


வங்கக்கடலில் கடந்த 21 ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து  நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி புயலாக உருவாகியது. இந்த புயலுக்கு  'டானா'  என்று பெயரிடப்பட்டுள்ள நிலையில், இவை வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று  ஒடிசாவின் புரி- சாகர் தீவுகளுக்கு இடையே கரையைக் கடக்க ஆரம்பித்தது. மணிக்கு 110 முதல் 120 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசிய இந்த டானா புயல் இன்று அதிகாலை கரையை கடந்தது.

இதன் காரணமாக  ஒடிசா மற்றும் மேற்கு வங்காள மாநிலத்தில் மிக கனமழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், ஒடிசாவில் புயலால் ஏற்பட்ட சேதங்களை  அம்மாநில முதலமைச்சர் மோகன் சரண் மாஜி, இன்று காலை ஆய்வு செய்தார். அப்போது, புயலால் ஒரு உயிரிழப்புக் கூட நேரிடக் கூடாது என்ற வகையில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், ஏற்கனவே சீரமைப்புப் பணிகளும் முழு வீச்சில் நடந்து வருவதாக  தெரிவித்த அவர், இன்று மாலை 6 மணிக்குள் கேந்திரபாரா, பாலசோர் உள்ளிட்ட அனைத்து இடங்களுக்கும் மின்சாரம் வழங்கப்படும் என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

No casualty due to cyclone dana rehabilitation work in full swing odisha chief minister


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->