10 ஆண்டுகால பாஜக ஆட்சி! தமிழகத்திற்கு பட்டைநாமம்! - முதல்வர் ஸ்டாலின்! - Seithipunal
Seithipunal


தருமபுரி : பத்தாண்டு கால பாஜக ஆட்சியில் தமிழகத்திற்கு ஒன்றுமே செய்யவில்லை என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தர்மபுரி மாவட்டம் பாளையம்புதூரில்  ஊராட்சி பகுதிகளில் மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். விழாவில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பேசியதாவது,

அரசின் நலத்திட்டங்கள் மக்களை சென்று அடைவதை உறுதி செய்யும் வாழ்கையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆட்சிக்கு வந்தவுடன் 2.29 லட்சம் மனுக்களுக்கு  தீர்வு காணப்பட்டுள்ளது. புகார் பெட்டியில் பெற்ற மனுக்களுக்கு ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்கு தீர்வு காணப்படும் என்று கூறினேன்.

எங்களை கேலி செய்து எதிர்க்கட்சியினர் முன்னிலையில் எங்களுக்கு வெற்றி தந்தீர்கள். தர்மபுரி வெண்ணம்பட்டி சாலையில் ரூபாய் 38 கோடியில் புதிய ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும். தீர்த்தமலையில் துணை விரிவாக வேளாண்மை மையம் அமைக்கப்படும்.

பேரூர் ஆட்ச்சியாக உள்ள அரூர் நகராட்சியாக தரப்படும் மாவட்டத்திற்கு தேவையான திட்டங்களை திட்டமிட்டு செயல்படுத்தி தருகிறோம் என்று உறுதி அளித்தார்.

தமிழ்நாட்டில் தொடர் தோல்வி அடைந்த பிறகும் மத்திய அரசு பாடம் கற்றுக் கொள்ளவில்லை. பத்தாண்டு கால ஆட்சியில் பாஜக தமிழகத்திற்கு ஒன்றுமே செய்யவில்லை என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM Stalin did nothing for Tamil Nadu during ten years of BJP rule


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->