கவுன்சிலர் கணவர் வெட்டி படுகொலை! முன்விரோதம் காரணமா? - Seithipunal
Seithipunal


குமரி மாவட்டத்தில் உள்ள மூவாற்றுமுகம்  இந்த பகுதியை சேர்ந்தவர் ஜாக்சன். இவர் அந்த பகுதியில் டெம்போ வேன்  ஓட்டி வருகிறார்.இவரது மனைவி உஷாராணி  திருவட்டார் பேரூராட்சி பத்தாவது வார்டு காங்கிரஸ் கவுன்சிலராக உள்ளார்.  இந்நிலையில், ஜாக்சன் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். 

ஜாக்சனை நேற்றிரவு செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு  ஒரு மர்ம கும்பல் அவரை தேவாலயம் அருகே வரவழைத்துள்ளது. அங்கு ஆறு பேர் கொண்ட ஒரு மரம கும்பல் அவரை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர்.

ஆனால் அதற்குள் அந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பியோடிவிட்டது. படுகாயம் அடைந்த ஜாக்சனை  திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி ஜாக்சன் உயிரிழந்தார். இது குறித்து அங்கு விரைந்த போலீசார்   சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி   விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  முதற் கட்ட விசாரணையில், இவருக்கும் விளவங்கோடு  பகுதியை சேர்ந்த ராஜகுமாரன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அடிதடியில் தொடங்கிய இவர்களது  சண்டை கொலையில் முடிந்துள்ளதாக தெரியவந்துள்ளது. கவுசிலரின் கணவரே கொலை செய்யப்பட்டுள்ளதால் திருவட்டாறு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

counsilor husband killed! at thiruvattaru! Is it due to prejudice?


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->