சென்னையில் மழை வெளுத்துவாங்கும்! அதி கனமழை இருக்காது: வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தகவல்! - Seithipunal
Seithipunal


சென்னையில் இன்று (அக்.16) அதி கனமழைக்கு வாய்ப்பில்லை என்று வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார். 

அவர் தனது பேஸ்புக் பதிவில், வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கடக்கும் என்றாலும், காற்றுக் குவிப்பு மேல் நோக்கி நகர்ந்ததால் இன்று அதி கனமழைக்கு வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார்.

இது சென்னை மக்களுக்கு நிச்சயமாக ஒரு நம்பிக்கை தரும் செய்தி. இருப்பினும், வடகிழக்கு பருவமழை இயல்பான அளவில் பெய்யும். அடுத்த சில நாட்களில், 18 முதல் 20 ஆம் தேதி வரை, மிதமான மழை மட்டுமே எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், மக்கள் கடந்த இரண்டு நாட்களில் நிறுத்திய வாகனங்களை வீட்டிற்கு கொண்டு செல்லலாம் என்று அறிவுறுத்தியுள்ளார்.

சென்னையில் கடந்த சில நாட்களில் கனமழையால் சில பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்திருந்தது. சிறப்பாகவே 30 செ.மீ அளவு மழை பதிவாகி, குறிப்பாக வேளச்சேரி, பெருங்குடி, மதிப்பாக்கம், துரைப்பாக்கம் போன்ற இடங்களில் வெள்ளம் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். பள்ளிக்கரணை, கண்ணகி நகர் மற்றும் பிற குடியிருப்பு பகுதிகள் நீர்மூழ்கிய நிலையில், மக்கள் வெளியே வர முடியாமல் சிரமப்பட்டுள்ளனர். 

சென்னையில் நேற்று முதல்வர் ஸ்டாலின் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். இன்னும் மழை நீர் வடிந்து முழுமையாக பழைய நிலைக்கு திரும்பும் வரை மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Danger of very heavy rains away from Chennai Meteorologist Pradeep John informs


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->