அந்தப்புர பெண்கள் தெலுங்கு பேசுபவர்கள்!...கஸ்தூரி மீது 4 பிரிவுகளின் கீழ் பாய்ந்த வழக்குப்பதிவு!
Those girls speak telugu kasthuri has been booked under 4 sections
சென்னை எழும்பூரில் பிராமணர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், 300 ஆண்டுகளுக்கு முன்பு ராஜாவுக்கு அந்தப்புரத்தில் பெண்களாக இருந்தவர்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் எல்லாம், தெலுங்கு பேசுபவர்கள் எல்லாம் இன்று வந்து தமிழர்கள் என்று கூறும் போது, எப்போதோ வந்த பிராமணர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்வதற்கு நீங்க யாருங்க தமிழர்கள் என்று பேசினார்.
மேலும், அதனால்தான் உங்களால் தமிழர்கள் முன்னேற்ற கழகம் என பெயர் வைக்க முடியவில்லை என்றும் எனப் பேசினார். இது தற்போது தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சியாக வெடித்துள்ளது.
கஸ்தூரியின் இந்த பேச்சிற்கு திமுக சார்பில் ஆ.ராசா கடும் கண்டனம் தெரிவித்தார். இதே போல், பிரிவினை வாதத்தை தூண்டி, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நடிகை கஸ்தூரி மீது சென்னை பெருநகர ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக வீரலட்சுமி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் அளித்த புகாரின் அடிப்படையில் நடிகை கஸ்தூரி மீது எழும்பூர் காவல் நிலையத்தில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
English Summary
Those girls speak telugu kasthuri has been booked under 4 sections