மருத்துவரை தாக்கியது தவிர்க்க முடியாத சம்பவம் - துணை முதல்வர் உதயநிதி..! - Seithipunal
Seithipunal


சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் தாயாருக்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என்று விக்னேஷ் என்பவர் பணியில் இருந்த மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்தியுள்ளார்.

உடனே அவர் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் விக்னேஷ் உள்பட 4 பேரை கைது செய்துள்ளனர். இதற்கிடையே இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சம்பவம் நடந்த மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள அரசு மருத்துவரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது:- மருத்துவர் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படு வருகிறது. அவரது தலைப் பகுதியில் 4 இடங்களில் கத்தியால் குத்தப்பட்டுள்ளது. ஆறு மாதங்களாக சிகிச்சையில் இருந்த தாயாருடன் வருபவர் என்பதால் சந்தேகம் எழவில்லை. இது தவிர்க்க முடியாத சம்பவம். இதுபோல் இனி நடக்காமல் பார்த்துக் கொள்வோம். மருத்துவர் குடும்பத்திற்கு ஆறுதல் கூறியுள்ளோம்" என்றுத் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

deputy cm uthayanithi visit gundy govt hospital


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->