வெள்ளியங்கிரி மலைக்கு பக்தர்கள் செல்ல தடை..வனத்துறை துறை அறிவிப்பு.!
Devotees not allowed to vellayangiri temple
வெள்ளியங்கிரி மலையில் உள்ள சுயம்பு லிங்க கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம் போளுவாம்பட்டி வனச்சரக பகுதியை சேர்ந்த வெள்ளையங்கிரி மலை பகுதிக்கு பௌர்ணமி மற்றும் திருவிழாக் காலங்களில் பக்தர்கள் அங்குள்ள சுயம்புலிங்க கோவிலுக்கு தரிசனம் சேமியா செல்வது வழக்கம்.
வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அப்பகுதியில் பொதுமக்களுக்கு திருவிழா மற்றும் விசேஷ காலங்களில் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது கோடைகாலம் தொடங்கியுள்ளதால் தண்ணீர் தேடி வன விலங்குகள் வெள்ளியங்கிரி மலை பக்கம் வருகின்றன.
இன்றைய தினம் சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் பலர் வெள்ளிங்கிரி மலைக்கு செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் வனவிலங்குகள் நடமாட்டம் காரணமாக வனத்துறை பக்தர்கள் மலைக்கு செல்ல திடீர் தடைவிதித்துள்ளது.
English Summary
Devotees not allowed to vellayangiri temple