"Go கொரோனா" வைரஸிடம் இருந்து தப்பிக்க.. வித்தியாச வழிபாடு செய்த மக்கள்.! - Seithipunal
Seithipunal


‌சிவகாசியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. திருவிழாவின் போது அம்மனை மனம் உருகி வேண்டி வழிபட்டு வரும் பக்தர்கள் பல்வேறு விதமான நேர்த்தி கடன்களையும் அம்மனுக்கு பக்தியுடன் செலுத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக விழாவின் முக்கிய நாளான ஒன்பதாம் நாளன்று கயிறு குத்து திருவிழாவை விமர்சையாக நடைபெற்றது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும் திரளான பக்தர்கள்  தங்களது உடம்பில் கரும்புள்ளி செம்புள்ளி குத்தி  மாறுவேடங்கள் தரித்து கையில் வேப்பிலையுடன் முக்கிய வீதிகள் வழியாக மாரியம்மன் கோவிலுக்கு சென்றனர்.

இவ்வாறு ஊர்வலமாக சென்று  கொரோனா நோயின் தாக்கத்திலிருந்து விடுபட அம்மனை வேண்டி வேப்பிலை படுக்கையில் உருண்டெழுந்து அம்மனை வணங்கினர். அதுபோல பொங்கலிட்டும், அக்னி சட்டி தூக்கியும், அழகு குத்தியும் பக்தர்கள் அம்மனுக்கு தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். இது போக முடி காணிக்கை முத்து காணிக்கை கயிறு குத்தி என அம்மனின் அருளுக்காக பக்தர்கள் ஏராளமான நேர்த்தி கடனை செலுத்தினர்.

தங்களது பல்வேறு விதமான காணிக்கைகளின் மூலமும்  வழிபாட்டுகளின் மூலமும்  அம்மனின் அருள் வேண்டி பக்தர்கள் நேர்த்திக்கடனை நிகழ்த்தி வருகின்றனர். இந்த திருவிழா வருகின்ற 12ஆம் தேதி புதன்கிழமை காலை வடம் பிடித்தல் நிகழ்ச்சியில் தொடங்கி மாலை தேரோட்டத்துடன் நிகழ்ச்சி முடிவடைகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Devotees offer miraculous prayer to save from Corona in Sivakasi Mariamman temple


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->