சாதிப் பெயர் கொண்ட பாடல்களை ஒலிபரப்ப தடை! முதல்வர் ஸ்டாலினுக்கு இயக்குநர் கோரிக்கை! - Seithipunal
Seithipunal


மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் 'தேவர் மகன்' படம் குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் சொன்ன கருத்துக்கள் பெரும் விவாத பொருளாக மாறி உள்ளது.

காரணம் தேவர் மகன் படத்தில் 'அந்த ஒரு பாடல்' தான் சிக்கல் என்று வெளிப்படையாக மாரி செல்வராஜ் தெரிவிக்கவில்லை. ஆனால், அவர் சொல்ல வருவது அதுதான், சாதிப் பெயர் கொண்ட பாடல்கள் தடை செய்யப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு கடுமையான விவாதங்கள் சமூகவலைத்தளங்களில் போய் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், சாதிப் பெயர் கொண்ட பாடல்களை பொது இடங்களில் ஒலிபரப்ப தமிழக முதல்வர் ஸ்டாலின் தடை விதிக்க வேண்டும் என்று, இயக்குநர் சீனு ராமசாமி கோரிக்கை வைத்துள்ளார்.

இது குறித்த அவரின் ட்விட்டர் பதிவில், "தமிழகத்தில் சாதிப்பெயர் கொண்ட சினிமா பாடல்கள், தனி இசை பாடல்கள் என எதுவாக இருந்தாலும், அவற்றை பொது இடங்களில், ஒலிபெருக்கிகளில் ஒலிபரப்ப தடை விதிக்க வேண்டும்.

எந்த பாடல்களிலும் உசுப்பேற்றும் சாதிய துவேஷம் மறைமுகமாக இருந்தால் கூட, அதை தணிக்கை செய்து தடை விதிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினிடம் வேண்டுகிறேன்" என்று இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Director Seenu Ramasamy Request To CM Stalin For Community song issue


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->