கீழ்த்தரமான அரசு! எடப்பாடி வழக்கு விவகாரத்தில் போட்டு தாக்கிய பிரேமலதா விஜயகாந்த்!  - Seithipunal
Seithipunal


மதுரை விமான நிலையத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, அமமுக பிரமுகர் ராஜேஸ்வரன் என்பவர் திட்டமிட்டு அவதூறாக பேசி பேஸ்புக்கில் லைவ் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில், எடப்பாடி பழனிச்சாமியின் பாதுகாவலர் ராஜேஷ்-ன் செல்போனை வழிப்பறி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், எடப்பாடி பழனிசாமி, பாதுகாவலர் கிருஷ்ணன் மற்றும் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் மகன் அரவிந்தன் ஆகிய 5 பேர் தாக்குதல், செல்போன் பறிப்பு உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதில் 'செல்போனை வழிப்பறி' வழக்கு அதிமுகவினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்கு செய்யப்பட்டதை கண்டித்து சென்னை, மதுரையில் நேற்று அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இன்றும் பல இடங்களில் போராட்டம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இடம் இந்த விவகாரம் குறித்து சித்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர், "எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மீது செல்போன் திருட்டு வழக்கு போட்டு இருப்பது தலைகுனிவாக, வெட்கக்கேடாக பார்க்கிறேன். 

ஒரு முன்னாள் முதலமைச்சராக இருந்த அவர் மீது வழக்கு பதிவு செய்வதற்கு முகாந்திரம் இருக்க வேண்டும். தமிழகத்தில் இப்படி ஒரு கீழ்த்தரமான அரசு நடக்கிறது என்பதற்கு இது ஒன்றே சாட்சி. 

இதுபோன்ற சம்பவங்களால் தான் அவர்களின் (ஆளும் கட்சி) தரத்தை அவர்களே தாழ்த்தி கொள்கிறார் என்று தான் அர்த்தம்" என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMDK premalada say about EPS case Madurai Airport


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->