ஈரோடு தேர்தல் : திமுக-நாதக கட்சியினரிடையே மோதல் - போலீசார் உள்பட 11 பேர் காயம்.! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்குத் தொகுதியின் எம்எல்ஏ திருமகன் ஈவேரா உயிரிழந்ததைத் தொடர்ந்து அந்தத் தொகுதி காலித் தொகுதியாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தேர்தல் ஆணையம் இந்தத் தொகுதிக்கு வருகிற 27 ஆம் தேதி தேர்தல் அறிவித்தது. 

இதனால், கிழக்குத் தொகுதியில் போட்டியிடும் அனைத்து கட்சியினரும் தீவிர பிரச்சரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்து வருகிறது.

இந்த நிலையில், தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் மேனகா நவநீதனை ஆதரித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று பிரச்சாரம் செய்தார். 

அப்பொழுது, திடீரென திமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டதால், பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த ஆண்கள் மற்றும் பெண்கள் என்று 
 சுமார் நூறுக்கும் மேற்பட்டோர் அலறி அடித்துக்கொண்டு அங்கிருந்தது தெரித்து ஓடினர். 

இதில், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நான்கு பேர், திமுக கட்சியை சேர்ந்த நான்கு பேர், மற்றும் மூன்று போலீசார் உள்பட மொத்தம் பதினொரு பேர் காயமடைந்தனர். இதையடுத்து அந்த பகுதியில் பாதுகாப்பிற்காக துணை ராணுவப் படையினர் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டனர். 

இதற்கிடையே மோதலில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மோதல் விவகாரத்தில் இரு கட்சியினரும் அளித்த புகாரின் பேரில் இரு தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk and ntk party clash on erode election campaign


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->