அவினாசி || மதுபான கூடத்தை அடித்து நொறுக்கிய திமுக நிர்வாகி - சிசிடிவியால் சிக்கிய அவலம்.! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, அவினாசி அடுத்த தண்ணீர்பந்தல் கிராமத்தில் அரசு மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடைக்கு அருகிலேயே மதுபானக் கூடமும் இயங்குகிறது. இந்த மதுபானக் கூடத்தை பாஸ்கர் என்பவர் டெண்டர் எடுத்து நடத்தி வருகிறார்.

ஆனால், இந்த மதுபானக்கூடம் இருக்கும் இடம் வேறு ஒரு நபருக்குச் சொந்தமானது. இந்த நிலையில், அந்த இடத்தையும், மதுபானக் கூடத்தையும் தனக்கு எழுதித்தர வேண்டும் என்று திமுகவைச் சேர்ந்த மாவட்ட பொருளாளர் சுவாமிநாதன் என்பவர் கேட்டுள்ளார்.

இதற்கு இடத்தின் உரிமையாளர் மறுப்புத் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், நேற்று இரவு மதுபானக் கூடத்திற்கு வந்த சுமார் முப்பதுக்கும் மேற்பட்டோர், மதுபானக் கூடத்தை அடித்து, உடைத்து சூறையாடினர். இந்த சம்பவம் தொடர்பாக மதுபான கூடத்தின் உரிமையாளர் சிசிடிவி காட்சிகளுடன் அவிநாசி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகார் மனுவில், மதுபானக் கூடம் உள்ள இடம் மற்றும் மதுபானக் கூடம் உள்ளிட்டவை தனக்குக் கிடைக்காத ஆத்திரத்தில் சுவாமிநாதன் தனது ஆதரவாளர்கள் மூலம், இந்த சம்பவத்தை அரங்கேற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk excuetive supporters attack bar in avinasi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->