நிபா வைரஸ் பரவி வருவதால் சுற்றுலா பயணிகளுக்கு பரிசோதனை! - Seithipunal
Seithipunal


தெர்மல் ஸ்கேனர் மூலம் சுற்றுலா வரும் பயணிகளுக்கு காய்ச்சல், சளி, இருமல் உள்ளதா என பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் வண்டூர் அருகே நடுவத்து பகுதியை சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர் நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதனை அடுத்து அவருடன் தொடர்பில் இருந்த 472 பேர் மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். இதேபோல் நிபா வைரஸ் அறிகுறிகளுடன் கண்ணூரில் இரண்டு பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொண்டு உள்ளனர்.

இதனை தொடர்ந்து, தமிழ்நாடு உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் நிபா வைரஸ் பாதிப்பு பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில் நீலகிரி மாவட்டம் கூடலூர் நாடுகாணி பகுதி, மலப்புரம் மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது. இதனால், கூடலூர் வழியாக சுற்றுலா பயணிகள் பலர் ஊட்டிக்கு சென்று வருகின்றனர். 

இந்நிலையில்,  நீலகிரி மாவட்டத்தில் நிபா வைரஸ் பரவாமல் தடுக்க கூடலூர் நாடுகாணி எல்லையில் நேற்று முதல் சுகாதாரத்துறையினர் அங்கு முகாமிட்டு கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், தெர்மல் ஸ்கேனர் மூலம் கேரளாவில் இருந்து பயணம் செய்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு காய்ச்சல், சளி, இருமல் உள்ளதா என சுகாதாரத்துறையினர் பரிசோதித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Due to the spread of Nipah virus tourists are tested


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->