7 வகை அசைவ உணவுகளுடன் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு இரவு விருந்து - இபிஎஸ் ஏற்பாடு.!!
edappadi palanisami arranged dinnar party to admk mlas
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சியினர் தீவிரமாகியுள்ளனர். இந்த நிலையில், சட்டபைத் தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியினரை உற்சாகத்தோடு வைத்திருப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார்.
அதன் படி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று இரவு சென்னை அடையாறு பசுமைவழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் இரவு விருந்துக்கு அவர் ஏற்பாடு செய்திருக்கிறார். இந்த விருந்தில் 7 வகையான அசைவ உணவுகள் மற்றும் சைவ உணவுகள் பரிமாறப்படுகிறது.

மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, சிக்கன் 65, மீன் வறுவல், மட்டன் சுக்கா, முட்டை, இறால் தொக்கு ஆகியவை பரிமாறப்படுகிறது. அதே நேரத்தில் அசைவ சாப்பாட்டை விரும்பாதவர்கள், சைவ உணவை அருந்தும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த இரவு விருந்தின் போது எம்.எல்.ஏ.க்களுடன் அமர்ந்து எடப்பாடி பழனிசாமியும் உணவு அருந்துகிறார். அப்போது சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தங்களது தொகுதி மக்களிடம் சென்று அவர்களது பிரச்சனைகளை கேட்டு தெரிந்து கொண்டு அதற்கேற்ப வேகமாக செயல்பட வேண்டும் என்பது உள்ளிட்ட அறிவுரைகளை எடப்பாடி பழனிசாமி வழங்கவுள்ளார். எடப்பாடி பழனிசாமி அளிக்க உள்ள இந்த இரவு விருந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
edappadi palanisami arranged dinnar party to admk mlas