#BREAKING || சென்னையில் நாளை நடைபெற இருந்த தேர்தல் ஆலோசனை கூட்டம் தள்ளி வைப்பு.!!
election consultation meeting to be held in Chennai tomorrow postponed
இந்தியாவின் 18 வது மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடத்தப்படுவதற்கான அதிக வாய்ப்புகள் இருப்பதால் பிப்ரவரி இறுதியில் தேர்தல் தேதி அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கபடுகிறது. இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தை தலைமைத் தேர்தல் ஆணையம் சென்னையில் நடத்த முடிவு செய்திருந்தது. நாளை (ஜனவரி 8) நடைபெற இருந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் அதிகாரிகள் சென்னைக்கு வர இருந்தனர்.
இந்த கூட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிகள், தேர்தலுக்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள், இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை உயர் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. குறிப்பாக தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் அதிகாரியாக மாவட்ட ஆட்சியர் நியமிக்கப்பட்டு தேர்தல் பணிகளை கண்காணிப்பர்.
இறுதி வாக்காளர் பட்டியலை பொறுத்தவரை ஜனவரி 22 ஆம் தேதி வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பாக நாளை சென்னையில் நடைபெற இருந்த ஆலோசனை கூட்டம் தள்ளி வைப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு அறிவித்துள்ளார். இந்திய தேர்தல் ஆணையத்தில் இந்த ஆலோசனை கூட்டணி மற்றோரு தேதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
election consultation meeting to be held in Chennai tomorrow postponed