ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலை நாடே திரும்பி பார்க்கும் - செங்கோட்டையன் பரபரப்பு பேச்சு.! - Seithipunal
Seithipunal


வருகிற 27 ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதன் காரணமாக அனைத்துக் கட்சியினரும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், ஈரோட்டில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:- "ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளருக்கு அதிகளவு மக்கள் ஆதரவு உள்ளது. அதிலும் குறிப்பாக பெண்கள் வாக்களிப்பதற்கு தயாராகி விட்டனர். 

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு திண்டுக்கல் தேர்தலை போல், ஜெயலலிதாவுக்கு மருங்காபுரி தேர்தலை போல் எடப்பாடி பழனிசாமிக்கு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் ஒரு திருப்பு முனையாக அமையும். 

நாடே ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலை திரும்பி பார்க்கும் வகையில் தேர்தலின் முடிவுகள் அமையும். எவ்வளவு தடை வந்தாலும் 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தென்னரசு வெற்றி பெறுவார். 

இந்த வெற்றி அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் நாற்பது தொகுதியிலும், 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலிலும் எடப்பாடி வெற்றி பெற்று தமிழகத்தில் நிரந்தர முதலமைச்சர் ஆக உதவும்" என்று அவர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ex minister sengottaiyan press meet for erode election


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->