அன்புமணி ராமதாஸ் விடுத்த அழைப்பு.. திமுக அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதிக்கும் விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு.!! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம் வளையமாதேவி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 25,000 ஹெக்டர் நிலத்தை என்எல்சி நிறுவனம் இரண்டாம் கட்ட நிலக்கரி சுரங்கத்திற்காக கையகப்படுத்துகிறது. இதற்காக இரு தினங்களுக்கு முன்பு விவசாய நிலம் மத்தியில் ராட்ச இயந்திரங்களைக் கொண்டு கால்வாய் வெட்டும் பணியை என்எல்சி நிர்வாகம் தொடங்கியது. 

அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களை அழித்து என்எல்சி நிர்வாகம் கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் ஆதரவோடும், காவல்துறையினரின் பாதுகாப்போடும் கால்வாய் அமைக்கும் பணியை தொடங்கியது.

இதற்கு எதிராக நேற்று பாமக சார்பில் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நெய்வேலியில் செயல்பட்டு வரும் என்எல்சி நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் இன்று தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் விவசாய சங்கங்கள் என்எல்சி நிறுவனத்திற்கு எதிராகவும் அதற்கு துணை போகும் திமுக அரசுக்கு எதிராகவும் போராட்டம் நடத்த வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர் பாண்டியன் "என்எல்சிக்கு எதிராக போராடிய மாணவர்கள் உட்பட பலரை திமுக அரசு கைது செய்து கொடுமைப்படுத்துகிறது. தேங்காய்க்கு உரிய விலை கொடுக்காமல் பாமாயில் இறக்குமதி செய்து விவசாயிகளை வஞ்சிக்கிறது. எனவே ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கு எதிராக விவசாயிகள் சார்பில் சென்னையில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று தமிழக அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் சத்யாகிரக போராட்டம் நடத்தப்படும்" என அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Farmers union satyagraha protest against DMK govt on aug15


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->