தாம்பரத்தில் சிக்கிய ரூ.4 கோடி‌ - FIRல் திடுக்கிடும் தகவல்.!! வசமாக சிக்கிய நயினார்.!! - Seithipunal
Seithipunal


கடந்த வாரம் தாம்பரம் ரயில் நிலையத்தில் பாஜக நிர்வாகியிடம் இருந்து நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் என பிடிபட்டவர்கள் வாக்குமூலம் அளித்ததாக காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. 

ஆனால் அதற்கு நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினா நாகேந்திரன் மறுப்பு தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தாம்பரத்தில் பிடிபட்ட 4 கோடி ரூபாய் சம்பந்தமான வழக்கின் முதல் தகவல் அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அந்த முதல் தகவல் அறிக்கையில் "பாஜக வேட்பாளர் நைனார் நாகேந்திரனின் அடையாள அட்டை பாஜக உறுப்பினர் அட்டை கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தாம்பரம் ரயில் நிலையத்தில் பிடிப்பட்ட பணம் நெல்லை தொகுதி வேட்பாளர் நைனா நாகேந்திரனுக்கு சொந்தமானது. 

கைது செய்யப்பட்ட நபர்கள் வாக்காளர்களுக்கு கொடுக்கத்தான் பணத்தை எடுத்துச் சென்றதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்" என அந்த முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிடிபட்டவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 

அந்த சமனில் தாம்பரம் ரயிலில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு தாம்பரம் மாநகர் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fir details in rs4crs seized in Tambaram railway station


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->