போக்கு காட்டி வரும் சீர்காழி சிறுத்தை.. புகைப்படம் சிக்கியது.!! - Seithipunal
Seithipunal


மயிலாடுதுறையில் 5வது நாளாக சிக்காமல் போக்கு காட்டி வரும் சிறுத்தையை தேடும் பணியில் வனத்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் முதல் நாள் கண்காணிப்பு கேமராவில் சிக்கிய சிறுத்தையின் புகைப்படம் முதல் முறையாக வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக வனத்துறையின் கேமராவில் சிறுத்தை சிக்காத நிலையில்  நேற்று சித்தர்க்காட்டில் உள்ள தண்டபாணி செட்டி தெருவில் ஆடு ஒன்று கடித்து குதறிய நிலையில் உயிரிழந்துள்ளது. உயிரிழந்த ஆட்டை நேரில் பார்வையிட்டு வனத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதற்கிடையே இன்று மயிலாடுதுறை ரயில் நிலையம் அருகே மேலும் ஒரு ஆட்டை சிறுத்தை அடித்துக் கொன்றது. வேட்டையாடப்பட்ட ஆட்டின் பாகங்களை வனத்துறையினர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் கொல்லப்பட்ட ஆடு சிறுத்தை கொல்லவில்லை எனவும், நாய் கடித்து அந்த ஆடு இறந்திருக்கலாம் தினமும் தகவல் வெளியாகி உள்ளது. சிறுத்தை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் சிறுத்தை பிடிக்கப்படும் என்றும், பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Forest dept released mayiladuthurai leopard photo


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->