மதுரையில் தாசில்தார் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம் - உதயநிதிஸ்டாலின் அதிரடி நடவடிக்கை.! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டம் முழுவதும் நடந்து வரும் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் அரசுத்துறை சார்ந்த அதிகாரிகளின் பணி ஆய்வுக்கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு இளைஞர்நலன், விளையாட்டு மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி அரசின் சிறப்பு திட்டங்கள் நிறைவேற்றம் குறித்து ஆய்வு செய்தார்.

அதில், சில அதிகாரிகள் தங்களுக்கு ஒதுக்கிய பணியில் மெத்தனமாக நடந்துகொண்டது தெரியவந்தது. அதன் படி மதுரை தெற்கு வட்ட தாசில்தார் சரவணன், திருப்பரங்குன்றம் நகர நிலவரித்திட்ட தனி தாசில்தராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

செல்லம்பட்டி ஒன்றிய வட்டார வளர்ச்சி அதிகாரி கீதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைக்கு மாற்றம் செய்யப்பட்டார். இதேபோல், சுகாதார ஆய்வாளர் ஒருவர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறையில் பணியபுரிந்த ஒரு சமையலர் உள்ளிட்டோரையும்  உடனடியாக பணியிட மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டது. 

அந்த உத்தரவின் படி நான்கு பேரும் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர். மேலும் 2 விடுதி காப்பாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த அதிரடி நடவடிக்கையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேற்கொண்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

four officers transfer in madurai


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->