புதிய நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கவும், ரேஷன் பொருட்கள் தரமாக வழங்கவும் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.! - Seithipunal
Seithipunal


விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழக அரசு நெல் கொள்முதல் செய்வதற்கு விவசாயிகள் வைக்கும் கோரிக்கையையும் மற்றும் அனைத்து ரேஷன் பொருட்களையும் தரமாக, எடை குறையாமல், காலத்தே கொடுப்பதற்கு பொது மக்கள் வைக்கும் கோரிக்கையையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழகத்தில் பிரதான தொழிலான விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்க வேண்டியது தமிழக அரசின் கடமை எனவும், விவசாயத்தொழிலைப் பாதுகாக்க விளைந்த, அறுவடையான நெல்லை கொள்முதல் செய்து, பாதுகாத்து, விற்பனைக்கு  கொண்டு செல்லும் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க வழி வகைச் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மாநிலம் முழுவதும் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் அதிக எண்ணிக்கையில்ல் திறக்கப்பட வேண்டும் எனவும், நிலையங்களில் கொள்முதல் செய்யும் பணிக்கு போதிய பணியாளர்கள் இல்லை என்பதையும், பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் அவ்வப்போதே வழங்கப்படவில்லை என்பதையும் சரிசெய்ய வேண்டும் எனவும் ஜி.கே. வாசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நெல்கொள்முதல் பணிகள் தடையில்லாமல், போதுமான பணியாளர்களை கொண்டு நடைபெறவும், நெல் மூட்டைகள் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்படவும், பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி அவ்வப்போதே வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதைப் போல, பொது விநியோகத் திட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷனில் வழங்கப்படும் அரிசி தரமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. என்றும், ரேஷன் அரிசி வெளிச்சந்தையில் விற்கப்பட்டு மீண்டும் ரேஷன் கடைகளுக்கு மறு சுழற்சியாக வருவது முறையில்லை, இது தவிர்க்கப்பட்டு தரமான அரிசியை வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

மேலும் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பாமாயிலுக்கு பதிலாக சமையலுக்கு பயன்படுத்த ஏதுவாக தரமான நல்லெண்ணெய் வழங்க வேண்டும் என பொது மக்கள் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ரேஷன் பொருட்களை வாங்குபவர்கள் பெரும்பாலும் சாதாரண ஏழை, எளிய, நடுத்தர மக்களாக இருப்பதால, பொது விநியோகத் திட்டத்தின்படி வழங்கப்படும் ரேஷன் பொருட்கள் அனைத்தும் தரமானதாக இருக்க வேண்டும். 

ரேஷன் கடைகள் திறந்திருக்கும் நாட்களில் பொருட்களை வாங்க வரும் மக்களுக்கு அனைத்துப் பொருட்களும் ஒரே சமயத்தில் கிடைக்க ஏதுவாக பொருட்கள் இருப்பில் இருக்க வேண்டும். வழங்கும் பொருட்களின் எடை குறையாமல், சரியான அளவில் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அரிசி உட்பட எந்த ஒரு ரேஷன் பொருளும் தட்டுப்பாடில்லாமல், மக்களை அலையவிடாமல் கொடுக்க வேண்டும்.
எனவே தமிழக அரசு, குடும்ப அட்டைதாரர்கள் எவ்வித சந்தேகத்திற்கும் உட்படாத வகையில் பொது விநியோகத்திட்டத்தின் பலன்களை பெறுவதற்கு ஏதுவாக ரேஷன் பொருட்கள் வழங்கப்பட வேண்டும் என்பதை உறுதி செய்துகொள்ள தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

GK Vasan Public Distribution system


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->