மாணவர்களுக்கு பாலியல் தொல்லை.. விடுதி காப்பாளர் போக்சோவில் கைது..! - Seithipunal
Seithipunal


மாணவர்களுக்கு  பாலியல் தொல்லை கொடுத்ததாக விடுதி காப்பாளரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் பத்தியாவரம் கிராமத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் அந்த பகுதியை சேர்ந்த 2000 மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த பள்ளியில் அருகே இயங்கிவரும் விடுதியில் சுமார் 100 க்கு மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.

நேற்று விடுதியில் தங்கி பயின்று வரும் மாணவர்கள் திருவண்ணாமலை சமூகநலத் துறை இணையதளம் மூலம் புகார் அளித்தனர். அந்த புகாரில் துணை விடுதி காப்பாளர் துரைப்பாண்டி என்பவர் ஒரின சேர்க்கையில் ஈடுபட வற்புறுத்தி பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டதாக தெரிவித்தனர்.

இதனை அடுத்து, பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுப்பட்டது தெரியவந்தது. இதனை அடுத்து, அவர் மீது போக்சோ வழக்குபதிவு செய்த காவல்துறையினர் துரைப்பாண்டியை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hostel keeper arrested for sexually harassing students


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->