மனைவியை இழந்து மனவேதனையில் இருந்த கணவன், மகள் தூக்கிட்டு தற்கொலை.!
Husband suicide in vellore
வேலூரில் மனைவியை இழந்து மனவேதனையில் இருந்த கணவன், மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
வேலூர் விருதம்பட்டு அருகே டி.கே.புரம் பகுதியை சேர்ந்த தினகரன் மின்வாரியத்தில் பணி புரிந்து வந்தார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளன. மூத்தமகள் மனநலம் பாதிக்கப்பட்டவர்.
இந்நிலையில் இவருடைய மனைவி கடந்த வருடம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
மனைவியின் இறப்பு தினகரனுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தி வந்த நிலையில், ஏற்கனவே ஒரு முறை தற்கொலைக்கு முயற்சி செய்த நிலையில் நேற்று இரவு தினகரனும், இளைய மகளும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து வந்த காவல்துறையினர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக விருதம்பட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Husband suicide in vellore