மனைவியின் தங்கையுடன் கள்ளகாதல்.. வெளியில் தெரிந்தால் அவமானம் என தற்கொலை..! - Seithipunal
Seithipunal


கள்ளக்காதல் ஜோடி விஷம் கொடுத்த தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரோடு சம்பத் நகர் பகுதியில் வசித்து வருபவர் சண்முகம். இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவியும் மூன்று மகள்களும் உள்ளனர். கணவன் மனைவி இருவரும் துப்புரவு பணியாளராக வேலை செய்து வருகின்றனர். சண்முகத்தின் மனைவி தமிழ்ச்செல்விக்கு காந்திமதி என்ற பெண் சகோதரி உறவு ஆவார்.

சண்முகமும், காந்திமதியும் ஒரே இடத்தில் வேலை செய்து வருவதால் இருவரும் ஒன்றாக சென்று இந்த பழக்கம் நாளடைவில் கள்ளகாதலாக மாறவே இருவரும்  நெருங்கி பழகி வந்துள்ளனர். நேற்று வழக்கம் போல வேலைக்கு சென்றுள்ளனர். பின் அங்குள்ள விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.

நேற்று, மதியம் அறை எடுத்தவர்கள் இன்று மதியம் வரை வெளியே வராததால் சந்தேகம் அடைந்த விடுதி காப்பாளர் அறைக்கு சென்று கதவை தட்டினார்.. ஆனால் எந்தவித பதிலும் வரவில்லை இதனால் அங்கிருந்த ஜன்னலில் ஒட்டப்பட்டு இருந்த கருப்பு ஸ்டிக்கரை கிழித்து பார்த்த பொழுது காந்திமதியும் சண்முகமுகமும் நிர்வாண நிலையில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் கதை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது இருவரும் சடலமாக கிடந்தது. அவர்களுக்கு அருகில் பீர் பாட்டில் மற்றும் எலி மருந்து ஆகியவை கிடந்துள்ளது. அவர்களின் உடலை மீட்ட காவல்துறையினர் பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் இருவரும் அறை எடுத்து உல்லாசமாக இருந்ததாகவும் கள்ளக்காதல் விவகாரம் வெளியே தெரி வந்தால் அவமானம் ஆகிவிடும் என்பதால் தற்கொலை செய்து கொண்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

illegal Couple Committed suicide


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->