புயல் எதிரொலி - விமான பயணிகளுக்கு இண்டிகோ நிறுவனம் அறிவுறுத்தல்.!
indigo company advisor to passengers for strom
தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்த நிலையில், இன்று அதிகாலை 1 மணி நேர நிலவரப்படி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகரும் வேகம் அதிகரித்துள்ளது.
அதாவது, காற்றழுத்த தாழ்வு மண்டலம் 8 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில், தற்போது மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இது வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று புயலாக மாறியபின் நாளை நள்ளிரவு அல்லது நாளை மறுநாள் தமிழக கடலோர பகுதிகளை நெருங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தின் சென்னை, தூத்துக்குடி மற்றும் மதுரை உள்ளிட்ட நகரங்களை சேர்ந்த விமான பயணிகளுக்கு இண்டிகோ நிறுவனம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், "கனமழை உள்ளிட்ட வேறுபட்ட பருவநிலை சூழலால், சென்னை, தூத்துக்குடி மற்றும் மதுரை நகரங்களுக்கு இயக்கப்படும் விமான போக்குவரத்து சேவையில் தொடர்ந்து பாதிப்பு ஏற்படும். திருச்சி மற்றும் சேலம் உள்ளிட்ட நகரங்களிலும் சேவை பாதிக்கப்படலாம்" என்று தெரிவித்துள்ளது.
English Summary
indigo company advisor to passengers for strom