அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்! ஜப்பான் விமான விபத்தில் உடல்கருகி பலியான உயிர்கள்! - Seithipunal
Seithipunal


ஜப்பான் நாட்டின் ஓகே விமான நிலையத்தில் கடலோர காவல் படை விமானத்தின் மீது, பயணிகள் விமானம் மோதி விபத்துக்குள்ளானதில், கடலோர காவல் படை விமானத்தில் இருந்த 6 பேர் உயர்ந்ததாக முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

விபத்து நடந்த போது பயணிகள் விமானத்தில் இருந்த 339 பயணிகள் மற்றும் பணியாளர்கள் தக்க நேரத்தில் பத்திரமாக மீட்கப்பட்டதும் அந்நாட்டு அரசாங்கத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

டோக்கியோ நகரில் உள்ள ஹனேடா விமான நிலையத்தின் ரன்வேயில் தரையிறங்கிய பயணிகள் விமானத்தின் பின்பகுதியில் திடீரென தீ பிடித்தது.

வெளியான வீடியோ கட்சிகளின் அடிப்படையில், அங்கு நிறுத்தப்பட்டிருந்த கடலோர காவல்படை விமானத்தின்,  பயணிகள் விமானம் மீது மோதியதும், இதனால் தரையிறங்கிய விமானம் தீப்பிடித்ததும் உறுதியானது.

பயணிகள் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில், கடற்படை விமானத்தில் இருந்த ஊழியர்கள் 6 பேர் உடல் கருகி பலியாகினர்.

நேற்று ஜப்பான் நாட்டில் அடுத்தடுத்து 30 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்ட அதிர்ச்சி அடங்குவதற்குள், இந்த விமான விபத்து அந்நாட்டு மக்களை மேலும் சோகத்தில் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Japan aircraft fire Haneda Airport 


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->