7 ஆயிரத்தை கடந்த மல்லிகைப்பூ... வியாபாரிகள் மகிழ்ச்சி..விலை ஏற்றம் எங்கு தெரியுமா ? - Seithipunal
Seithipunal


தொடர் மழை காரணமாக பூக்கள் விளைச்சல் குறைந்துள்ளது. இதன் விளைவாக சங்கரன்கோவில் மலர் சந்தையில் பூக்களின் வரத்து குறைவாக உள்ளது.இந்நிலையில், இன்று சங்கரன்கோவில் மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிகைப்பூ 7 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில் நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.இந்நிலையில் பாவூர்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளான ஆவுடையானூர், நாட்டார்பட்டி, திப்பணம்பட்டி கல்லூரணி, மேலப்பாவூர், குறுங்காவனம், கீழப்பாவூர், பெத்தநாடார்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் அதிகளவில் நெல் நடவு செய்யப்பட்டுள்ள வயல்வெளிகள் முழுவதும் தண்ணீர் குளம் போல் தேங்கியது.

சாலைப்புதூர், நவநீதகிருஷ்ணபுரம், நாகல்குளம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் வெண்டை செடிகள் பாரவி இருந்த நிலையில் தண்ணீர் செல்லும் கால்வாய்களில் உடைப்பு ஏற்பட்டு அதுவும் மழை நீரில் மூழ்கியுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டது. அரசு உரிய நிவாரணம் வழங்குமா? என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.

பாவூர்சத்திரம் ரெயில்வே கேட் பகுதியில் இருந்து மேலப்பாவூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள ரெயில்வே சுரங்கப்பாதையில் தொடர்ந்து பெய்த கனமழையினால் தண்ணீர் முழுவதுமாக தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக வாகனங்களிலோ, நடந்தோ பயணிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தொடர் கனமழையினால் பல பகுதிகளில் உள்ள கிராமப்புற சாலைகள் பெரிதும் சேதமடைந்துள்ளன.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக பூக்கள் விளைச்சல் குறைந்துள்ளது. இதன் விளைவாக சங்கரன்கோவில் மலர் சந்தையில் பூக்களின் வரத்து குறைவாக உள்ளது.இந்நிலையில், இன்று சங்கரன்கோவில் மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிகைப்பூ 7 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதேசமயம் கன்னியாகுமரி தோவாளை மலர்சந்தையில் ரூ.4000-க்கு விற்பனையாகிறது.நாளை இந்தாண்டின் கடைசி முகூர்த்த நாள் என்பதும் மல்லிகைப்பூ விலை உயர்வுக்கு காரணம் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jasmine flower crosses 7000 Merchants are happy Do you know where prices are rising


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->