கள்ளச்சாராயம் விவகாரம் : அன்புமணி நேரடி விசிட்! மருத்துவர்களுடன் ஆலோசனை! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருபவர்களை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நெரிசல் சந்தித்து ஆறுதல் கூறிவருகிறார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவரும்  சம்பவம் கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தை உலுக்கி வருகிறது. மேலும் 150க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பிரிவு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு நிவாரணமாக ரூ.10 லட்சம் அறிவித்திருந்த நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இன்று நிவாரண தொகை ரூ.10 லட்சம் வழங்கப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து பல அரசியல் கட்சித் தலைவர்கள் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிவருகின்றனர்.

இந்தநிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனைகளில் சிகிக்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிவருகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kallakurichi hospital anbumani visit


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->