1மாதம் போதும்! மொத்த போதைப்பொருளையும் ஒழித்துவிடுவோம் - சவால் விட்ட அன்புமணி கப்ஜிப் ஆன திமுக!!
kallakurichi pmk leader anbumani press meet
பாமகவிடம் ஒரு மாதம் ஆட்சியை கொடுத்தாலே போதும். தமிழ்நாடு முழுவதும் போதைப்பொருள் புழக்கத்தை ஒழித்து காட்டுவோம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குறித்து பலியானவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
நூற்றுக்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை, பாண்டிச்சேரி ஜிப்மர், விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை சந்தித்து ஆறுதல் கூறினார். மருத்துவர்களுக்கு மருத்துவ பரிசோதனை குறித்து ஆலோசனை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாமகவிடம் ஒரு மாதம் ஆட்சியை கொடுத்தாலே போதும். தமிழ்நாடு முழுவதும் போதை பொருள் புழக்கத்தை வைத்து காட்டுவோம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
English Summary
kallakurichi pmk leader anbumani press meet