மஞ்சள் வீரன் டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன் மறுப்பு! அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Kancheepuram court rejects TTF Vasan bail plea
பிரபல யூடியூபரும் மஞ்சள் வீரன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாக இருந்த டிடிஎஃப் வாசன் கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி சென்னையில் இருந்து மகாராஷ்டிரா நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று உள்ளார். அப்போது சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அடுத்த பாலுச்செட்டி சத்திரம் அருகே தாமல் எனும் இடத்தில் தனது இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்ய முயற்சித்த போது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.
இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட அவர் மீண்டும் சென்னை திரும்பிய நிலையில் பாலுச்செட்டி சத்திரம் போலீசார் அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து காஞ்சிபுரம் நடுவர் நீதிமன்ற நீதிபதி இனியா கருணாகரன் முன்பு ஆஜர் படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.டி.எஃப் வாசனைக்கு வரும் அக்டோபர் 3ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
அன்றைய தினமே டி.டி.எஃப் வாசனுக்கு ஜாமின் கோரப்பட்ட நிலையில் தனக்கு ஜாமீன் வழங்க அதிகாரம் இல்லை என கூறி ஜாமின் வழங்க மறுத்துவிட்டார். இதனை அடுத்து டி.டி.எஃப் வாசன் தரப்பில் காஞ்சிபுரம் மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும், 308வது பிரிவின் கீழ் கொலையாத மரணத்தை விளைவிக்கக் கூடிய செயலை செய்ததன் காரணமாக அவருடைய ஜாமீன் மனு நிராகரிக்கப்படுகிறது என காஞ்சிபுரம் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனால் அவருடைய ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
English Summary
Kancheepuram court rejects TTF Vasan bail plea