உதட்டில் காயத்துடன் கல்லூரி பேராசிரியை மர்ம மரணம்.. காவல்துறை தீவிர விசாரணை.!
Kanchipuram College Lecturer Anitha Mystery Death with Injury on Lip Police Investigation
உதட்டில் இரத்த காயத்துடன் கல்லூரி பேராசிரியை மர்ம மரணம் அடைந்தது தொடர்பாக காவல் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஓரிக்கை அங்காள பரமேஸ்வரி நகர் பகுதியை சார்ந்தவர் அனிதா (வயது 45). இவர் காஞ்சிபுரம் அருகேயுள்ள ஏனாத்தூர் அருகேயுள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இந்நிலையில், நேற்று வழக்கம்போல பணிக்கு சென்ற அனிதா, மாலை வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டிற்கு வந்த அனிதா வீட்டின் மாடிக்கு சென்று இருக்கிறார். வீட்டின் தரைத்தளத்தில் அவரது அக்கா சண்முக கனி மற்றும் அவரது கணவர் வெள்ளைச்சாமி ஆகியோர் வசித்து வருகின்றனர்.
![](https://img.seithipunal.com/media/kanchipuram%20railway%20station.jpeg)
மாலை வீட்டின் மேல் அறைக்கு சென்ற தங்கை இரவு 11 மணியாகியும் சாப்பிட கூட கீழே வராததால் சந்தேகமடைந்த சண்முக கனியின் கணவர் வெள்ளைச்சாமி மேலே சென்று வீட்டின் கதவை தட்டியுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் அனிதா கதவை திறக்கவில்லை.
இதனையடுத்து, கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்க்கையில் படுக்கை அறையில் அனிதா உதட்டில் இரத்த காயத்துடன் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக காஞ்சிபுரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![](https://img.seithipunal.com/media/investigation.jpg)
தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் அனிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள தொடங்கியுள்ளனர்.
அனிதாவின் உதட்டில் இரத்தக்காயம் இருந்ததால் அவர் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டாரா? அதனால் விஷம் ஏதும் குடித்து தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது மர்ம நபர்கள் அவருக்கு பாலியல் தொல்லை அளித்த காரணத்தால் மனதுடைந்து தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது பணத்திற்காக மர்ம நபர்கள் தாக்கியதில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தாரா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Kanchipuram College Lecturer Anitha Mystery Death with Injury on Lip Police Investigation