#தமிழகம் || போர்வைக்குள் புகுந்த பாம்பு., அடித்து கொலை செய்த தந்தை.! காலையில் சிறுமிக்கு நேர்ந்த துயரம்.! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் அருகே பாம்பு கடித்து சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இரவு தூங்கிக் கொண்டிருக்கும்போது போர்வையில் புகுந்த பாம்பு கடித்தது தெரியாமல் உறங்கிய நிலையில், காலையில் அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், பனையூர் பகுதியில் நாராயணன் என்பவர் தனது வீட்டில் நேற்றிரவு குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது, போர்வையில் பாம்பு ஊர்வதை நாராயணன் கண்டுள்ளார். இதனையடுத்து பாம்பை அடித்து வீட்டின் வெளியே போட்டுள்ளனர்.

ஆனால், பாம்பை அடித்துக் கொள்வதற்கு முன்பே, நாராயணனின் மகள் சிறுமி தீபாவை பாம்பு கடித்துள்ளது. இது  தெரியாமலேயே மீண்டும் உறங்க சென்றுள்ளனர்.

மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது சிறுமி தீபா உயிர் இறந்து கிடப்பதை கண்டு நாராயணன் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதே சமயத்தில் இரவு உறங்கிக் கொண்டிருக்கும்போது போர்வையில் புகுந்து பாம்பால் திரும்பி உயிரிழந்துள்ள சம்பவம் அந்த பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kanjipuram panaiyur littlie girl die in snake bite


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->