தலையை சீவிடுவன்.. சீமானுக்கு கொலை மிரட்டல் - இன்ஸ்டா ஸ்டோரியால் பரபரப்பு...!!
kill thread to ntk leader seeman
தமிழகத்தில் தனித்து இயங்கும் கட்சியான நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
சீமானுக்கு விடுக்கப்பட்டுள்ள கொலை மிரட்டல் குறித்து நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையருக்கு புகார் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- "தேனியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் சீமானுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பிரபல சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு வெளியிடப்பட்டுள்ளது.
அந்த இன்ஸ்டா ஸ்டோரி பதிவில், "சீமானின் தலை விரைவில் துண்டிக்கப்படும். விரைவில் நாதக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டி நிலவும் என்று பதிவிட்டுள்ளது" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
kill thread to ntk leader seeman