கிருஷ்ணகிரி பள்ளி மாணவி வன்கொடுமை: பப்பாளி, அன்னாசி சாப்பிடுங்க.. மேலும் 2 பள்ளிகள், போலி என்சிசி அதிர்ச்சி தகவல்!
Krishnagiri NTK NCCCamp School girl abused
கிருஷ்ணகிரி, தனியார் பள்ளியின் என்சிசி முகாமிற்கு சென்ற 13 வயது பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பள்ளியின் முதல்வர், ஆசிரியர், பள்ளி தாளாளர், பயிற்சியாளர் உட்பட ஏழு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
என்சிசி பயிற்சியாளரும், நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகியுமான சிவராமனை இன்று தனிப்படை அமைத்து போலீசார் கைது செய்தனர். தப்பி ஓட முயன்று அவருக்கு கால் முறிவு ஏற்ப்பட்டதாவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை விசாரணையில் மேலும் 13 மாணவிகள் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட மாணவி ஆசிரியரிடம் இதுகுறித்து தெரிவித்தபோது, பப்பாளி, அன்னாசி பழம் சாப்பிடுங்கள் என்று பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஆசிரியை அறிவுரை கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், கிருஷ்ணகிரியில் என்சிசி கேம்ப்பில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
பள்ளியில் நடந்தது போலியான என்.சி.சி கேம்ப் என தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட போலி என்.சி.சி மாஸ்டர் சிவராமனிடம் போலீஸ் நடத்திய விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
ஒய்வு பெற்ற சிஆர்பிஎப் உதவி ஆய்வாளர் ஒருவரை என்.சி.சி கமாண்டர் என கூறி நம்ப வைத்த சிவராமன், இதே போன்று சூலகிரி பகுதியில் உள்ள இரண்டு பள்ளிகளிலும் போலி என்.சி.சி கேம்ப் நடத்தியதும் அந்த பள்ளிகளில் எடுக்கப்பட்ட என்.சி.சி கேம்ப் போட்டோக்களை காட்டி பள்ளியில் கேம்ப் நடத்தியதும் தெரியவந்துள்ளது.
English Summary
Krishnagiri NTK NCCCamp School girl abused