சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு போனஸ் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு சர்க்கரைத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-

"தமிழ்நாட்டில் பதினாறு கூட்டுறவு மற்றும் இரண்டு பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் உள்ளன. கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் எதிர்வரும் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2023-2024 ஆம் ஆண்டிற்கான மிகை ஊதியம் மற்றும் கருணை தொகை வழங்க ஆணையிட்டுள்ளார்.

அதன் அடிப்படையில் ஒதுக்கீட்டு உபரி உள்ள சுப்ரமணிய சிவா மற்றும் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட இரு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கும் மிகை ஊதியமாக 8.33 சதவீதம் மற்றும் கருணை தொகையாக 11.67 சதவீதம் என்று மொத்தம் 20 சதவீதம் போனஸ் வழங்கவும், மீதமுள்ள 14 கூட்டுறவு மற்றும் இரண்டு பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு மிகை ஊதியமாக 8.33 சதவீதம் மற்றும் கருணை தொகையாக 1.67 சதவீதம் என்று மொத்தம் 10 சதவீதம் போனஸ் வழங்கவும் ஆணையிட்டுள்ளார்.

இதன் மூலம் தமிழகத்தில் உள்ள 16 கூட்டுறவு மற்றும் இரண்டு பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் சுமார் 5,775 தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் பயன்பெறுவர். மேலும், மிகை ஊதியம் மற்றும் கருணை தொகை வழங்க ரூ.411.90 லட்சங்கள் செலவினம் ஏற்படும்" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

deepawali bonous announce to sugar factory employees


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->