அமரன் படத்தின் கதை இது தான்!...உளறித் தள்ளிய இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி! - Seithipunal
Seithipunal


அமரன் திரைப்படம் போர் பற்றிய படம் இல்லை என்று, இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'அமரன்'. திரைப்படத்திற்கு, ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் இந்த படத்தில் 'முகுந்தன்' என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் காஷ்மீரில் படமாக்கப்பட்டுள்ளன. இந்த படத்தில் புவன் அரோரா, சுரேஷ் சக்கரவர்த்தி, ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இத்திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை மறுநாள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்முரம் அடைந்துள்ளது.

இந்த நிலையில், அமரன் திரைப்படம் போர் பற்றிய படம் இல்லை என்றும், ஒரு ராணுவ வீரரோட வாழ்க்கை பயணம்தான் கதை என்று இயக்குனர் பெரியசாமி தெரிவித்துள்ளார். மேலும், காஷ்மீரின் சூழ்நிலை, ராணுவத்தின் ரோல் பிலே என்ன உள்ளிட்டவை குறித்து கதை கூறும் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

This is the story of amaran director rajkumar periyaswamy who pushed me away


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->