திருப்பத்தூரில் தனியார் பள்ளிக்குள் நுழைந்த சிறுத்தை..! மாணவர்கள் அதிர்ச்சி..!! - Seithipunal
Seithipunal


திருப்பத்தூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகே உள்ள தனியார் பள்ளியில் இன்று மாலை திடீரென சிறுத்தை புகுந்துள்ளது. பள்ளிக்குள் சிறுத்தையை கண்ட மாணவ, மாணவிகள் கடும் அதிர்ச்சியும், பீதியும் அடைந்து கூச்சலிட்டு உள்ளனர்.

இதையடுத்து பள்ளிக்குள் சிறுத்தை நுழைந்திருப்பதை பள்ளி நிர்வாகம் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அந்த தனியார் பள்ளிக்கு உடனடியாக விரைந்து வந்த வனத்துறையினர், சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது சிறுத்தை அங்கு பள்ளிக்குள் இருந்த ஒரு முதியவரை தாக்கி விட்டு அருகில் இருந்த குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து விட்டதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து பள்ளியில் இருக்கும் மாணவ, மாணவியர்களை வனத்துறையினரும், பள்ளி நிர்வாகமும் சேர்ந்து பத்திரமாக வெளியேற்றும் பணியில் இறங்கினர்.

இதையடுத்து குடியிருப்பு பகுதிக்கு சென்ற சிறுத்தை , பின்னர் அங்கிருந்து அருகில் உள்ள வனப்பகுதியில் புகுந்து விட்டதாக தெரிய வந்துள்ளது. இந்நிலையில் அந்த வனப்பகுதியில் ஒரு கார் நிறுத்தப்பட்டு உள்ளதாகவும், அதற்குள் ஐந்து பேர் வரை இருப்பதாகவும் வனத்துறையினருக்கு தெரிய வந்துள்ளது.

இதையடுத்து அந்த கார் நிறுத்தப்பட்டுள்ள இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர், அந்த காரில் உள்ளவர்களை பாதுகாப்பாக அனுப்பி விட்டு, சிறுத்தையை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கடந்த வாரங்களில் தான் சேலம் பகுதிகளில் சிறுத்தை ஆடு, மாடுகளை அடித்துக் கொன்றுள்ளது. தற்போது திருப்பத்தூரில் சிறுத்தை வந்துள்ளது அங்குள்ள மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Leopard in Thirupathur Private School


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->