ஈரோடு: சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்தவர் கைது.! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் போத்தநாயக்கன் புதூர் பகுதியில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தனிப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து பவானி போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

அப்போது போத்தநாயக்கன்புதூர் சுடுகாடு அருகில் உள்ள முட்புதர் பகுதியில் சாக்கு மூட்டையில் மது பாட்டில்கள் விற்பனைக்காக ஆக வாலிபர் ஒருவர் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அந்த வாலிபரிடம் விசாரணை மேற்கொண்டதில், சூரம்பட்டி வலசு, பாண்டியன் வீதியை சேர்ந்த பிரபு (25) என்பதும், சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்துள்ளது.

இதைத்தொடர்ந்து அவரிடம் இருந்த 20 பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் பிரபுவை கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Liquor seller arrest in erode


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->