சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்தவர் கைது - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள கிரிமேடு பகுதியின் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக எஸ்.பிக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலையடுத்து தனிப்படை போலீசார் கிரிமேடு பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது கிரிமேடு பகுதியை சேர்ந்த அர்ஜுனன் என்பவர் வீட்டின் அருகே மது பாட்டில்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரிடம் இருந்த 41 புதுவை மாநில மதுபாட்டில்கள் மற்றும் 5 லிட்டர் சாராயம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்கிற போலீசார், அர்ஜுனனை கைது செய்துள்ளனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Liquor seller arrest in Villupuram


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->